திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By siva
Last Updated : திங்கள், 26 அக்டோபர் 2020 (19:39 IST)

முதல் ஓவரிலேயே விக்கெட்: ரானாவை காலி செய்த மேக்ஸ்வெல்

முதல் ஓவரிலேயே விக்கெட்: ரானாவை காலி செய்த மேக்ஸ்வெல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46வது லீக் போட்டி இன்று ஷார்ஜாவில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது 
 
புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள கொல்கத்தாவும் ஐந்தாவது இடத்தில் உள்ள பஞ்சாபும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை பஞ்சாப் அணி தேர்வு செய்ததால் கொல்கத்தா அணி சற்று முன் களமிறங்கியது. இந்த நிலையில் முதல் ஓவரை மாக்ஸ்வல் வீசிய நிலையில் இரண்டாவது பந்திலேயே தொடக்க ஆட்டக்காரரான ரானா விக்கெட்டை வீழ்த்தினார். இதனை அடுத்து தற்போது திரிபாதி களத்தில் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் முதல் ஓவரில் கொல்கத்தா அணி திரிபாதியின் ஒரு சிக்சர் உட்பட 9 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது