1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2020 (17:28 IST)

சிஎஸ்கேவின் தோல்விக்கு இதுதான் காரணம் – லாராவின் கருத்து!

ஐபிஎல் தொடரில் அதிக தாக்கம் செலுத்திய அணியாகக் கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுகிறது.

அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ப்ளே ஆஃப் தகுதியை இழந்த முதல் அணியாக சிஎஸ்கே மாறியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தோல்விக்கு கேப்டன் தோனியின் போதாமையே காரணம் என சமூக வலைதளங்களில் பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு அணி கேப்டன் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதது இதுவே முதல்முறை.

இந்நிலையில் சென்னை அணியின் தோல்விக்குக் காரணம் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காததுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள லாரா ‘சென்னை அணிக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமாக அமைந்துள்ளது. அந்த அணியில் நிறைய அனுபவம் வாய்ந்த முதிய வீரர்கள் உள்ளனர். அதனால் இளைஞர்களுக்கு வாய்பளிக்காமல் அனுபவத்தையே நம்பியது. அதுதான் அந்த அணியின் தோல்விக்குக் காரணம்’ எனக் கூறியுள்ளார்.