செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Updated : திங்கள், 9 நவம்பர் 2020 (17:31 IST)

ஐபிஎல்- போட்டியில் ஜொலித்த தமிழருக்கு இந்திய அணியில் இடம் !

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் -2020 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு பந்து வீசியதால் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இந்திய – ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய  டி-20 அணியில் காயத்தால் விலகியுள்ள சக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் ஒரு ஓவரில் 6 பந்துகளையும் யார்க்கராக வீசும் திறமை  பெற்றவர்கள் ஆவார். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.