1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2020 (15:45 IST)

வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் !!!!

கொரோனா தொற்று இன்னும் பரவலாகிக் கொண்டிருப்பதால் இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து மக்களைப் பாதுக்காக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள நிலையில் பரவல் தொடர்வதால் சமீபத்தில் தமிழக முதல்வர்  முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், கடந்த 30 ஆம் தேதியுடன்  கொரோனா கால பொதுமுடக்கம் முடிவடைந்ததால் சில தளர்வுகளுடன் வரும் நவம்பர் 30 வரை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டார்.

முக்கியமாக இந்த வருடம் இன்னும் பள்ளிகள்,  கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், வரும் நவம்பர் 16 முதல் 9 ,10,11,12, ஆகிய வகுப்புகளுக்கான வகுப்புகள் தொடக்கப்படும் எனவும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஆனால் இதற்கு மக்களும் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில்,  அமைச்சர் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதில் ஆர்முடன் உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில்,  பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடமும் மக்களிடமும் தமிழக அரசு கருத்துக்கேட்டிருந்தது. இதில் 60% பெற்றோர் பள்ளிகளைத் திறக்க வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் 9,10,11,12  ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகிறது.