வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 9 நவம்பர் 2020 (16:39 IST)

ரஜினி அரசியலில் ஈடுபடக்கூடாது ... ’’இதனால்’’ ஆயுள் அதிகரிக்கும்!’’ - ஜோஷியர் கணிப்பு.

ரஜினிகாந்துக்கு வரும் டிசம்பர் மாதத்திலிருந்து மூன்றாண்டுகளுக்கு எந்த அரசியல் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது எனக் கன்னியாகுமரியைச் சார்ந்த ஒரு ஜோஷியர் கணித்துள்ளார்.

நடிகர் ரஜினி தனது ஆன்மீக அரசியலை வெளிப்படுத்திய பிறகும் இன்னும் கட்சித் தொடங்காமல் காலம்தாழ்த்தி வருகிறார். அவரது இல்லத்தின் முன் கடந்த வாரம் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமென போராடினார்கள்.

இந்நிலையில், ரஜினியின் அறிக்கை வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி ஆன்மீகத்தில்  ஈடுபட்டால் அவருக்கு இன்னும்  16 ஆண்டுகள் ஆயுள் விருத்தியாகும் எனக் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் ஜோதிடர்   சாந்தகுமார் கணித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

நடிகர் ரஜினிகாந்த்துக்கு வரும் டிசம்பர் மாதத்திலிருந்து மூன்றாண்டுகளுக்கு எந்த அரசியல் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. எனவே இதிலிருந்து விடுபட அவர் வீட்டிலேயே இருந்து ஓய்வு எடுத்து ஆன்மீகப் பணியில் ஈடுபடலாம்… ஏற்கனவே கடந்த 2010 ஆண்டில் ஒரு கண்டத்தைத் தாண்டிய ரஜினிக்கு இந்த 2020 வருடம் கவனத்துடன் இருக்க வேண்டும்… அவர் வீட்டிலிருந்து ஆன்மீகத்தை மேற்கொண்டால் அவருக்கு 16 ஆண்டுகள் ஆயுள் கெட்டிப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


ஆன்மீகத்தில் நாட்டமுள்ள ரஜினி தனது ராசி, நட்சத்திரத்தினால்தான் இன்னும் கட்சித் தொடங்கவில்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.