ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? ராஜஸ்தான் ராயல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்!
இன்று அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் இன்று ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.
இந்த சீசனில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி பெற்று தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் இதுவரை 5 ஆட்டகளில் விளையாடியுள்ள மும்பை இந்திய்ன்ஸ் இரண்டில் தோல்வியும் மூன்று ஆட்டங்களில் வெற்றியும் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதுவரை ஐபிஎல் ஆட்டங்களில் 21 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸும் மோதியுள்ளனர். அதில் ஆளுக்கு 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இன்று இந்த இரு அணிகளிடையே நடக்கும் போட்டியானது நிகருக்கு நிகராக நடக்கும் மோதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸில் ஸ்மித், சஞ்சு சாம்சன், தெவாட்டியா ஆர்ச்சர் போன்றவர்கள் பெரும் பலமாய் உள்ளார்கள். அதேபோல மும்பை அணியிலும் ரோகித் ஷர்மா, பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ், பாண்ட்யா, டி காக் போன்ற வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை அளித்து நம்பிக்கை அளிக்கின்றனர்.