திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (19:30 IST)

ஐபிஎல்-2020; டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சு….டெல்லி அணி பேட்டிங் !

ஐபிஎல்-2020 தொடர் தற்ஓது ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இன்று துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி மாலை 7:30 மணிக்கு தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி நடப்பு தொடரில் 4 போட்டிகளில் விளையாடி அதில் 3 வெற்றி பெற்றுள்ளது.

ஸ்ரேயா ஐயர்ஸ் தலைமையிலான டெல்லி அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் போட்டியும் சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:- 1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. முகமது சிராஜ், 6. ஷிவம் டுபே, 7. மொயீன் அலி, 8. இசுரு உடானா 9.வாஷிங்டன் சுந்தர், 10 நவ்தீப் சைனி, 11. சாஹல்,ஆகியோர் உள்ளனர்.

கோலி எதாவது வியூகம் வகுத்துள்ளரா என்பதும் ,சுரேய் அய்யர் தலைமையிலான அணிபெங்களூரை எப்படி எதிர்கொள்ளும் என்பது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது.  இதில் பெங்களூர் அணி 14 போட்டிகளிலும் டெல்லி அணி 8 போட்டிகளிலும்வெற்றியும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .