1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 19 அக்டோபர் 2020 (11:42 IST)

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி!

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவருகிறது. நேற்று தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் 4 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் விஐபிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவது பெரும் கவலையை தருகிறது. ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு அவர்களின் மகனும் தற்போதைய மன்னார்குடி திமுக எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது