’’என்னை யாரோ கொல்ல வருகிறார்கள்..’’ .அலறியடித்து ஓடிய பிரபல பாடகி சுசித்ரா

Sinoj| Last Updated: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (17:06 IST)

தன்னை யாரோ கொல்ல வருகிறார்கள் என்று அலறியபடி பாடகி சுசித்ரா, பிரபல ஹோட்டலில் இருந்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல சேனலில்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகச்சியில் 4 வது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி
தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 16 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளதால் பரபரப்பாக போய்க்கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா கடந்த வாரம் கலந்து கொண்டார்.

இதையடுத்து அடுத்த வைல்ட் கார் எண்ட்ரிகாக சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள்செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சுசுத்ரா ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அங்கு அவர் தன்னை ஒருவர் கொல்ல வருவதாகக் கத்திக்கொண்டே ரிசப்சனுக்கு ஓடி வந்ததாகவும், அவரது அறைக்கதவை சிலர் தட்டியதாகவும் இதைச் சிலர் பார்த்ததாகவும்இணையதளத்தில் ஒரு தகவல் வெளியாகிறது.

மேலும் ஓட்டர் நிர்வாகத்தினர் கூறிய தகவலின் படி பிக்பாஸ் குழுவினர் வந்து சந்தித்து , சுசித்ராவிடம் பேசியுள்ளனர். இந்த சம்பவம்
சினிமாவட்டாரத்தில் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :