திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 30 அக்டோபர் 2020 (19:37 IST)

பந்து வீச்சாளரை தமிழில் திட்டிய தினேஷ் கார்த்திக்… நெட்டிசன்கள் கண்டனம்

ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களின் நம்பர்  ஒன் பொழுதுபோக்காக மாறியுள்ளது. சில எதிர்பார்க்காத முடிவுகளும் நிகழ்வுகளும் நடந்துவருகிறது.

அந்த வகையில், மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், 14 வது ஒவரை வீசிய சக வீரரை என்ன ….பந்து வீச்சு என தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அந்த பந்தில் ரன் எடுக்கப்பட்டதால் அவர் கோபம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

இது அப்படியே கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ள மைக்கில் துல்லியமாகக் கேட்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நெட்டிசன்கள் தினேஷ் கார்த்திக் மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.