1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : புதன், 7 அக்டோபர் 2020 (21:42 IST)

ராஜஸ்தான் அணியில் இணைந்த முக்கிய வீரர்… உற்சாகமான ரசிகர்கள்!

உடல்நலம் சரியில்லாத தந்தையைப் பார்க்க சென்ற பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ராஜஸ்தான் அணியில் சேர்ந்துள்ளார்.

துபாயில் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும், தங்கள் வீரர்கள் உள்ளிட்ட குழுவோடு துபாய்க்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்ட நிலையில் ராஜஸ்தான் அணிக்காக விளையாட இருந்த  பென் ஸ்டோக்ஸ் உடல்நலம் சரியில்லாத தந்தையை பார்ப்பதற்காக நியுசிலாந்துக்கு சென்றார்.

இதனால் அந்த அணிக்கு ஒரு முக்கிய வீரரை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போது அவர் அங்கிருந்து திரும்பி தனது தனிமைப்படுத்தல் காலத்தை முடித்து அணியுடன் இணைந்துள்ளார். அடுத்த போட்டியில் இருந்து அவர் போட்டிகளில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் பலம் கூடியுள்ளது.