1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : புதன், 7 அக்டோபர் 2020 (21:42 IST)

ஐபிஎல் தொடரில் தேர்வான முதல் அமெரிக்க வீரர் விலகல்! அவருக்குப் பதில் யார் தெரியுமா?

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாட ஒப்பந்தமான அமெரிக்க வீரர் அலிகான் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா லாக்டவுனால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் முதல் முதலாக அமெரிக்காவைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ளார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த கரிபியன் லீக் போட்டிகளில் பொல்லார்ட் தலைமையிலான அணியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஹேரி குர்னி காயம் காரணமாக அணியில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக அலிகான் சேர்க்கப்பட்டுள்ளார். 13 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் அமெரிக்க வீரராக அலிகான் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போதும் அலிகானும் காயமடைந்துள்ளதால் அவரும் அணியில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.