யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ: வெற்றிக்கு பின் ஹர்பஜன்சிங் டுவீட்!

Last Modified புதன், 24 ஏப்ரல் 2019 (07:36 IST)
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளேஃஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. கடந்த ஆண்டும் முதன்முதலில் பிளேஃஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற சிஎஸ்கே, இந்த ஆண்டும் முதல் ஆளாக பிளேஃஆப் சுற்றுக்குள் நுழைந்தது. மேலும் ஒரே ஒரு நாளில் இழந்த முதலிடத்தை மீண்டும் பெற்றது
இந்த நிலையில் ஒவ்வொரு சிஎஸ்கே போட்டி முடிந்த பின்னரும் தமிழில் அசத்தலான டுவீட்டுக்களை பதிவு செய்து வரும் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் நேற்றைய போட்டி முடிந்ததும் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஐபில் ல கிடைக்குற கோப்பைக்கு
கௌரவம் இருக்கு அத எடுக்கிற கைகளுக்கு பின்னால சரித்திரம் உண்டு. ஆனா அந்த கோப்பையை அடிக்கறதுக்கு ஏற்கனவே சிஎஸ்கேன்னு ஒரு டீம் இன்னைக்கு #பிளேஃஆப் ல்ல கால் பதிச்சுட்டாங்கனு தெரியபடுத்த வேண்டிய நேரம். ஐபிஎல்ல்ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ' என்று பதிவு செய்துள்ளார்

நேற்றைய போட்டியில் ஹர்பஜன்சிங் நான்கு ஓவர்கள் பந்துவீசி 39 ரன்கள் கொடுத்து, வார்னர், பெயர்ஸ்டோ ஆகிய இரண்டு முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :