டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த தல தோனி!

Last Modified வெள்ளி, 10 மே 2019 (19:08 IST)
இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆஃப் போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் வழக்கம்போல் இந்த முறையும் தலதோனி
டாஸ் வென்றார். இதனையடுத்து தனது அணி பந்துவீசும் என்று அவர் அறிவித்தார். எனவே இன்னும் சில நிமிடங்களில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது

இன்றைய சிஎஸ்கே அணியில் வாட்சன், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, பிராவோ, ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் டெல்லி அணியில் பிரித்வி ஷா, தவான், ஸ்ரேயாஸ் ஐயர், காலின் முன்ரோ, ரிஷப் பண்ட், அக்சார் பட்டேல், ரூதர்போர்டு, கீமோபால், அமித் மிஷ்ரா, டிரெண்ட் போல்ட், இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :