1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (19:11 IST)

’சென்னை சூப்பர் கிங்ஸ் ’வீரர்களின் உருவம் ஒட்டப்பட்ட ரயில் : ரசிகர்கள் ஹேப்பீ

தற்போது ஐபிஎல் சீசன் தொடர்   சூப்பராக நடந்து கொண்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எல்லோராலும் விரும்பப்படும் ஒரு அணியாக உள்ளது. காரணம் தோனி உள்ளது முக்கியமான காரணாமாகும்.
இது மாணவர்களுக்கு விடுமுறை தினம் ஆகையால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் ஐபிஎல் தொடரை ரசித்துப் பார்த்துவருகின்றனர்.
 
இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் இருந்து கிழக்குக் கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரெயிலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் உருவம் உள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
 
பார்க்கவே செம ஜோராக உள்ளது. மஞ்சல் வண்ணத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.