மும்பையிடம் சரண் அடைந்த ஐதராபாத்: 118 ரன்களுக்கு ஆல் அவுட்

Last Modified செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (22:07 IST)
இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததால் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது
மும்பை பந்துவீச்சாளர்களின் அதிரடி தாக்குதலால் ஆரம்பம் முதலே திணறி வந்த ஐதராபாத், 18.4 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் வில்லியம்சன் மற்றும் யூசுப் பதான் தலா 29 ரன்கள் எடுத்தனர். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களிலும் சொற்ப ரன்களுக்கு தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்

இந்த நிலையில் மும்பை அணியின் மெக்லெனாஹன், பாண்டியா, மற்றும் மார்கண்டே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், பும்ரா, முசாபுதீர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டு விக்கெட்டுக்கள் ரன் அவுட் முறையில் வீழ்ந்தது.

இந்த நிலையில் 119 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடி வரும் மும்பை அணி சற்றுமுன் வரை 2.5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 12 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் லீவிஸ் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்இதில் மேலும் படிக்கவும் :