ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ரபாடா

r
Last Updated: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (13:03 IST)
தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

 
 
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும்  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் வரும் 7-ம் தேதி  கோலாகலமாக தொடங்வுள்ளது. இந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா விளையாட இருந்தார்.
r
 
சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் முதுகு வலியால் அவதிப்பட்டுள்ளார். பின்னர் இது தொடர்பாக ஸ்கேன் செய்து பார்த்தபோது. அவருக்கு காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :