1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 5 ஏப்ரல் 2018 (14:58 IST)

ஐபிஎல் தொடக்க விழாவில் நடனமாடும் தமன்னா

ஐபிஎல் தொடக்க விழாவில் தமன்னாவின் நடனம் இடம்பெறுகிறது. 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பல நடிகர், நடிகைகளையும்  இதில் இடம்பெறச் செய்து வருகின்றனர் போட்டியை நடத்துபவர்கள்.
 
ஷ்ரத்தா கபூர், பரினீதி சோப்ரா, திஷா பதானி, எமி ஜாக்சன், ரிதேஷ் தேஷ்முக், வருண் தவான், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஹிருத்திக் ரோஷண் எனப் பல  நடிகர் – நடிகைகள் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். இதில், பிரபுதேவாவுடன் இணைந்து நடனம் ஆட இருக்கிறார் தமன்னா.