1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By
Last Updated : சனி, 30 டிசம்பர் 2017 (16:43 IST)

எலும்புகளை வலுப்படுத்த உதவும் கொள்ளு பீட்ரூட் சப்பாத்தி

கேழ்வரகு, கொள்ளு மாவில் கால்சியம் நிறைந்திருப்பதால் அதனை உட்கொள்ளும் குழந்தைகளின் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இதனை செய்வதற்கு தேவையான பொருட்களையும், செய்முறையைப் பற்றியும் பார்ப்போம்.
கேழ்வரகு மாவு - 200 கிராம், 
கொள்ளு மாவு  - 200 கிராம், 
பீட்ரூட்                - 150 கிராம், 
எண்ணெய்         - தேவையான அளவு.
உப்பு                   - தேவையான அளவு.
 
செய்முறை
 
பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு, கொள்ளு மாவுடன் உப்பு, துருவிய பீட்ரூட் போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் அப்படியே  ஊற வைக்கவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைத்து பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சப்பாத்தியை போட்டு எடுக்கவும் அருமையான ராகி, கொள்ளு பீட்ரூட் சப்பாத்தி ரெடி.