செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. கார்கில் போர் சாதனைகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 25 ஜூலை 2020 (18:47 IST)

முதுகில் குத்திய நவாஸ் ஷெரீப்: பழி தீர்த்த கார்கில் நாயகன் வாஜ்பாய்!

கார்கில் ஊடுருவல் நடந்த போது அந்நாள் பிரதமர் வாஜ்பாய் கடும் கோபம் அடைந்த நிகழ்வு இப்போது நினைவுக்கு வருகிறது.... 
 
1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாயி லாகூர் சென்றார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
 
இருப்பினும் அடுத்த இரண்டு மாதத்திலேயே கார்கிலில் ஊடுருவியது பாகிஸ்தான். இதனால் மிகுந்த ஆவேசத்துடன் வாஜ்பாய், நவாஸ் ஷெரீப்பை ஃபோனில் தொடர்புக் கொண்டு பாகிஸ்தான் தனது முதுகில் குத்தி விட்டதாக கூறினார். 
 
பாகிஸ்தான் சதியை முறியடிக்க 'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. வான்வழித் தாக்குதல் மூலம் இந்திய ராணுவம், தனது நிலைகளை ஒவ்வொன்றாக கைப்பற்ற ஆரம்பித்தது.  
தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னர் பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆதரவை நாடியது. அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் பாகிஸ்தானின் போக்கிற்கு கடும் கண்டம் தெரிவித்ததால், வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பின்வாங்க உடன்பட்டது. 
 
1999 ஆம் ஆண்டு ஜூலை 26ல் இந்தியா, கார்கில் பகுதியை முழுவதுமாகக் கைப்பற்றி இந்திய கொடியை பறக்க விட்டது. நீண்ட நாட்கள் நீடிக்க வேண்டிய போர் இந்திய ராணுவ வீரர்களின் தீரமான செயல்களால் இரண்டே மாதத்தில் முடிவடைந்தது. 
 
இந்தியாவின் முதுகில்குத்தி விட்டதாக கடந்த 2016 ஆண்டு நவாஸ் ஷெரீப் ஒப்புக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.