செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (18:02 IST)

திரைப்படமாகும் முன்னாள் பிரதமரின் வாழ்க்கை வரலாறு

கடந்த சில வருடங்களில் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த பயோபிக் படங்கள் இந்தியில் அதிகமாக வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

இதற்கு முன்னாள் பிரதமர் நரேந்திர மோடி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் குறித்த திரைப்படங்களும், பால் தாக்கரே போன்ற அரசியல்வாதிகள் குறித்த படங்களும் இந்தியில் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில் பாஜக கட்சியை தோற்றுவித்தவரும், முன்னாள் பிரதமரும் ஆன வாஜ்பாய் அவர்களின் கதையை திரைப்படமாக எடுப்பதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. இதற்காக “தி அண்டோல்ட் வாஜ்பாய்” என்ற புத்தகத்தின் உரிமையை வாங்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் ஷிவ சர்மா “தி அன்டோல்ட் வாஜ்பாய் என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை உருவாக்க இருக்கிறோம். அதிக கவனம் பெறாத ஒரு நாயகரின் சாதனையை உலகுக்கு சொல்ல முடிவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புத்தகத்தில் அவருடைய ஆளுமை திறன், அரசியல் ஈடுபாடு போன்ற பலவற்றை தெரிந்து கொள்ள முடிந்தது” என்று கூறியுள்ளார்.

தற்போது ஸ்கிரிப்ட் பணிகளில் இருக்கும் அந்த படத்திற்கு “தி அன்டோல்ட் வாஜ்பாய்” என பெயரிட்டிருக்கிறார்கள். திரைக்கதை பணி முழுவதுமாக முடிவடைந்த பிறகு நடிக நடிகையர் பற்றி முடிவு செய்ய இருப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.