1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. Vikram released on July 8 in hotstar

’விக்ரம்’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

Vikram
உலகம் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தை ரிலீஸ் உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றிருந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 8-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் ஹாட்ஸ்டார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கமல் ஹாசன் விஜய் சேதுபதி நடிப்பில் அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

அடுத்த கட்டுரையில்
விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’…. இயக்குனர் CS அமுதன் வெளியிட்ட முக்கிய தகவல்!