வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 17 அக்டோபர் 2023 (20:17 IST)

'லியோ' படத்திற்கு தியேட்டரில் பேனர் வைக்கக் கூடாது- நீதிமன்றம் உத்தரவு

leo vijay
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் அதிகாலை காட்சிக்கு நீதிமன்றத்தை அணுகிய தயாரிப்பு நிறுவனத்திற்கு தங்களால் உத்தரவிட முடியாது என்றும், காலை 7 மணி காட்சிக்கு அரசிடம் கோரிக்கை வைக்கலாம் என்று கூறியது.

இந்த நிலையில்,  லியோ படத்திற்கு அனுமதியின்றி தியேட்டரில் பேனர் வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியில் நடிகர் விஜய் ரசிகர்களால் வைக்கப்படும் பதாகைகள் வெடிகள் வெடிப்பதற்கு தடை விதிக்கக் கோரி அம்மாவட்டத்ததைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

லியோ படத்திற்கு திரையரங்குகள் முன்பு பேனர் வைக்க அனுமதி கோரி எந்தவித விண்ணப்பமும் வழங்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.