1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. Tom cruise Mission impossible Indian collection report

வசூலில் மிரட்டும் மிஷன் இம்பாசிபிள்… இந்தியாவில் இத்தனை கோடி வசூலா?

Tom Cruise
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடித்து தொடர்ந்து வெளியாகி வரும் பட வரிசை ‘மிஷன் இம்பாசிபிள்’. 1996ல் மிஷன் இம்பாசிபிள் முதல் பாகம் வெளியான நிலையில் இதுவரை மொத்தம் 6 பாகங்கள் இந்த படவரிசையில் வெளியாகியுள்ளது.  அனைத்து பாகங்களுமே ஆக்‌ஷன் பட பிரியர்களுக்கு புல் மீல்ஸ் விருந்தாக அமைந்தது.

இந்நிலையில் மிரட்டலான இரண்டு ஆக்‌ஷன் சீக்வென்ஸ்களோடு தற்போது வெளியாகியுள்ளது மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கோனிங் பாகம் 1. இந்த படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ள நிலையில் வசூலும் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது.

இந்தியாவில் இந்த படம் ரிலீஸாகி 5 நாட்களில் சுமார் 60 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
மீண்டும் தொடங்கப்படும் சங்கமித்ரா.. பட்ஜெட் இத்தனை கோடியா?