தொடர் சரிவில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!
தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்றும் ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று ஒரு கிராமு தங்கம் விலை 15 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் விலை 120 ரூபாயும் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5535.00 என்றும் ஒரு சவரன் தங்கம் 44280.00 என்று விற்பனை ஆகி வருகிறது.
24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூபாய் 6005.00 என்றும், 8 கிராம் ரூ. 48040.00 என்றும் சென்னையில் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் வெள்ளி ஒரு கிலோவுக்கு 1800 ரூபாய் குறைந்துள்ளது என்பதும் ஒரு கிலோ ரூ. 78500.00 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
Edited by Siva