1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. The Batman movie scene leaked on internet

‘தி பேட்மேன்’ பட காட்சிகள் இணையத்தில் லீக் - பேரதிர்ச்சியில் படக்குழு!

The Batman
மேட் ரீவ்ஸ், இயக்ககத்தில் உருவாகியிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம்  ‘தி பேட்மேன்’. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது. இப்படம் வருகிற மார்ச் மாதம் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதற்காக படக்குழு மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இருக்கும் நேரத்தில் இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்காகி அவர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த வீடியோக்கள் வெளியான சில நிமிடங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவிட்டது. மிகுந்த பாதுகாப்புடன் ரகசியம் காத்துவந்த படக்குழுவினரால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதனால் தீவிர ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் அமீர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!