புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (20:33 IST)

கணவரை பிரிந்த சோகத்தில் கன்னிகா - வருத்தத்தில் சினேகன்!

தமிழ் நடிகை கன்னிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் கவிஞர் சினேகனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்றும் செய்திகள் வெளியானது. பின்னர் இவர்கள் இருவரும் திடீர் திருமணம் செய்து ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்தனர். 
 
இவர்கள் இருவரையும் ரொமான்ஸ், காதல் என சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இந்நிலையில் சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அவரின் பெட்டி படுக்கைகளை கன்னிகா தயார் செய்து வழி அனுப்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. 
 
அந்த வீடியோவை இஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ள கன்னிகா,  " உன் பிரிவை நான் என்றும் தாங்கி கொள்ள
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல ?
என் உள்ளம் தடுமாறுதே... ஓ வோ
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும் மனம் சொல்லுமே... என ரொமான்டிக் காதல் பாடலுடன் பிரிவை வெளிப்படுத்தியுள்ளனர். இதோ அந்த வீடியோ...