செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (09:04 IST)

மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் அமீர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் அமீர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படத்தில் இயக்குனர் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது அந்த கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி இந்த படம் தேசிய விருது பெற்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்தநிலையில் வெற்றிமாறன் மற்றும் அமீர் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த விரிவான தகவல் விரைவில் வெளிவரும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
வெற்றிமாறன் தயாரிப்பில் அமீர் நடிக்கிறாரா? அல்லது அமீர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் வெற்றிமாறன் திரைக்கதை வசனம் எழுதுகிறாரா? து என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை என்றாலும் இருவரும் இணைந்து உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது