திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (08:42 IST)

2023 ஆம் ஆண்டுக்காக மொத்த படங்களையும் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்… 2000 கோடி ரூபாய் முதலீடு!

திரையரங்க ரிலீஸுக்கு பிறகான ஓடிடி ரிலீஸூக்காக தமிழில் சுமார் 18 படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழின் முன்னணி ஓடிடி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம். தற்போது தொடர்ந்து முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களைக் கைப்பற்றி வருகிறது.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான 17 படங்களைக் கைப்பற்றியுள்ளது. இதில் விஜய் , அஜித் படங்களும் அடக்கம். இதுபோல தென்னிந்தியாவில் படங்களை ரிலீஸ் செய்ய சுமார் 2000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.