வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (09:56 IST)

நெட்பிளிக்ஸ் சி.இ.ஓ திடீர் விலகல்.. என்ன காரணம்?

Netflix
நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ரீட் ஹேஸ்டிங்ஸ் என்பவர் திடீரென தனது பதவியில் இருந்து விலகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த 25 ஆண்டுகளாக அதாவது நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓவாக அதாவது 1997 ஆம் ஆண்டு முதல் சிஇஓ பதவியில் இருந்து வந்தவர் ரீட் ஹேஸ்டிங்ஸ். இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சிஇஓ பதவியிலிருந்து விலகி உள்ளார். அவர் பதவி விலகியதுக்கான காரணத்தை எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இணை சிஇஓக்களாக பணியாற்றி வரும் டெட் சரண்டாஸ் மற்றும் கிரேக் பீட்டர்ஸ் ஆகிய இருவரும் தங்கள் பதவியை தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விரைவில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பதவி நிரப்பப்படும் என கூறப்படுகிறது
 
சமீபத்தில் தான் ரூபாய் 2000 கோடி முதலீடு நெட்பிளிக்ஸ்  செய்தது என்பதும் அஜித் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் ஒளிபரப்பு உரிமையை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva