1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (10:42 IST)

நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை பகிரவும் இனி கட்டணம்! – பயனாளர்கள் அதிர்ச்சி!

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் தங்களது சந்தாதாரர்களுக்கு புதிய கட்டண முறையை அமல்படுத்தியுள்ளது.
netflix

உலகம் முழுவதும் இணைய வளர்ச்சியால் மக்கள் படங்களை தங்கள் செல்போன்களிலேயே பார்த்துக் கொள்ளும் அளவிற்கு ஓடிடி தளங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. அப்படியான ஓடிடி தளங்களில் முன்னிலையில் உள்ளது நெட்ப்ளிக்ஸ்.

உலகம் முழுவதும் 223 மில்லியன் சந்தாதாரர்களை நெட்ப்ளிக்ஸ் கொண்டுள்ளது. நெட்ப்ளிக்ஸை சப்ஸ்க்ரைப் செய்துள்ள பலர் தங்களது லாக் இன் பாஸ்வேர்டை தனது நண்பர்களுக்கு பகிர்வதும், ஒரே பாஸ்வேர்டை வைத்து வேறு வேறு நபர்கள் ஓடிடி தளத்தில் படங்கள் பார்ப்பதும் சமீபமாக அதிகமாக உள்ளது.

அதை தடுக்கும் வகையிலும் கூடுதல் லாக் இன்னுக்கு கூடுதல் தொகை வசூலிக்கும் விதமாகவும் நெட்ப்ளிக்ஸ் புதிய ஐடியாவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் தங்கள் பாஸ்வேர்டை வேறு நபர்களுக்கு ஷேர் செய்தால் ரூ.250 கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்ப கட்டமாக சிலி மற்றும் பெரு நாட்டில் இந்த சோதனை முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்து ஒவ்வொரு நாடாக அமல்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K