திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (11:33 IST)

முதல் சீசனே இன்னும் முடியலையே?? – ஹவுஸ் ஆப் தி ட்ராகன் சீசன் 2 அறிவிப்பு!

House of the Dragon
புகழ்பெற்ற Game of Thronesன் முந்தைய கதையான ஹவுஸ் ஆப் தி ட்ராகனின் இரண்டாவது சீசனுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் 2011ம் ஆண்டில் வெளியான வெப் சிரிஸ் கேம் ஆஃப் த்ரோன்ஸ். சாங் ஆப் ஐஸ் அண்ட் ஃபயர் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த வெப் சிரிஸ் பரவலான வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்குள் 8 சீசன்கள் வெளியாகியுள்ளது. இதன் கடைசி சீசன் கடந்த ஆண்டு வெளியானது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரில் பிரபலமான டெனேரியஸ் டார்கேரியன் என்னும் ட்ராகன் குயினின் முன்னோர்களின் கதையாக ஹவுஸ் ஆப் தி ட்ராகன் (House of the Dragon) இணைய தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. டார்கேரியன் மக்களின் வாழ்க்கையை சொல்லும் இந்த தொடரின் முதல் எபிசோட் ஆகஸ்டு 21ம் தேதி வெளியானது. இரண்டாவது எபிசோட் நாளை வெளியாக உள்ளது. முதல் எபிசோட் முதலாகவே GOT ரசிகர்கள் இந்த தொடரை கொண்டாடி வருகின்றனர்.

ஹவுஸ் ஆப் தி ட்ராகனின் முதல் சீசன் இப்போதுதான் தொடங்கியுள்ள நிலையில் அதற்கு சீசன் 2க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த சிறிய ப்ரோமோ வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.