பிரபல ஹாலிவுட் நடிகர் மாரடைப்பால் மரணம்

Burt Reynolds
VM| Last Modified வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (16:10 IST)
பிரபல ஹாலிவுட் நடிகரான பர்ட் ரெனோல்ட் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.1936ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி டான்சிங், மிச்சிகனில் பிறந்தவர் பர்ட் ரெனோல்ட் (82). 1950-களில் தொலைகாட்சியில் நடிக்க தொடங்கி தனது சிறந்த நடிப்பால் பல்வேறு பட வாய்ப்புகளை பெற்றார்.

இவர் நடித்து வெளியான ஸ்மோகி, பண்டிட், கேனான்பாள் ரன், டெலிவரன்ஸ் அனைத்தும் சூப்பர் ஹிட் படமாக ஹாலிவுட் திரையுலகை கலக்கி வந்தன. 1970-களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் இவரும் ஒருவர்.

ஆனால் மனதை தளரவிடாது மீண்டும் தான் யார் என்பதை தனது நடிப்பின் மூலம் 1997ல் வெளியான பூகி நைட்ஸ் படத்தில் நிரூபித்தார். தொடர்ந்து சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் என பல விருதுகளை தட்டிச்சென்றார்.

82 வயதுடைய இவர் சில வருடங்களாக இதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவருடைய இழப்பு திரைதுறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :