1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By VM
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (19:35 IST)

ஹாலிவுட் நடிகருக்கு 10 ஆண்டு ஜெயில்

போதை மருந்து கொடுத்து பெண்ணை பலாத்காரம் செய்த ஹாலிவுட் நடிகருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 25 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

 
‘கோஸ்ட் டாட்’ ‘தி ஹங்ரி ஐ ரீயூனியன்,’ ‘பேட் ஆல்பர்ட்,’ உள்பட படங்களில் காமெடி  கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் பில் காஸ்பி (81  வயது). கடந்த 2004–ம் ஆண்டு ஆண்ட்ரியா காஸ்டான்ட் என்ற பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கில் நடிகர் பில் காஸ்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
 
பில் காஸ்பி ஒரு காம கொடுரன் என்றும்,  அவரது பெயர் அருகில் உள்ள பள்ளி மற்றும் முக்கிய இடங்களில் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்று  இருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.