1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 6 அக்டோபர் 2022 (12:56 IST)

முதன்முறையாக பெண் ப்ளாக் பாந்தர்! – மார்வெல் ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பு!

Wakanda Forever
மார்வெல் ஸ்டுடியோஸின் அடுத்த படமான “வகாண்டா ஃபாரெவர்”-ல் பெண் ப்ளாக் பாந்தர் அறிமுகமாவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோ சாகச படங்களை தயாரித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். இந்த ஆண்டில் மார்வெல் நிறுவனத்தின் ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேன்ச், தோர் படங்களை தொடர்ந்து அடுத்ததாக வெளியாக உள்ளது ப்ளாக் பாந்தர்.

ப்ளாக் பாந்தர் படத்தின் முதல் பாகத்தில் வாகாண்டாவின் இளவரசன் டி சாலாவாக சாட்விக் போஸ்மன் நடித்திருந்தார். கடந்த ஆண்டு சாட்விக் போஸ்மன் புற்றுநோயால் காலமானார். இதனால் அடுத்த ப்ளாக் பாந்தர் படத்தில் யார் டி சாலாவாக நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது.


ஆனால் டி சாலா கதாப்பாத்திரத்திற்கு சாட்விக் போஸ்மனை தவிர வேறு யாரையும் நடிக்க வைக்க விருப்பம் இல்லை என தெரிவித்த மார்வெல் நிறுவனம், டி சாலாவின் தங்கையாக வரும் ஷூரி அடுத்த ப்ளாக் பாந்தராக மாறுவதாக கதையை மாற்றி அமைத்து “வகாண்டா ஃபாரெவர்” படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் தமிழ் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் மார்வெல் ரசிகர்களிடையே வைரலாகி வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த படத்தை ரியான் கூக்ளர் இயக்கியுள்ள நிலையில், இளவரசி ஷூரியாக லெடிட்டா வ்ரைட் நடித்துள்ளார்.