செவ்வாய், 6 ஜூன் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified புதன், 16 மார்ச் 2022 (08:18 IST)

LGBTQக்கு ஆதரவாக பதிவிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்! – ஆர்வலர்கள் வரவேற்பு!

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக மார்வெல் ஸ்டுடியோஸ் பதிவிட்டுள்ளது ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் தன்பாலின ஈர்ப்பு குறித்த பிம்பங்களை பல்வேறு அமைப்புகள் உடைத்து வரும் நிலையில் ஹாலிவுட்டில் இது அதிகமாக நடந்து வருகிறது. ஹாலிவுட் நடிகர்கள், பாப் பாடகர்கள் என பலரும் தொடர்ந்து தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல சூப்பர் ஹீரோ படங்களை தயாரித்து வரும் மார்வெல் ஸ்டுடியோஸ் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளது. அதில் “LQBTQ மக்களுக்கு எதிரான தனிநபர் உரிமையை, சமத்துவத்தை தடுக்கும் சட்டங்களை நாங்கள் கண்டிக்கிறோம். மார்வெல் ஸ்டுடியோஸ் நம்பிக்கை மற்றும் வலிமையுடன் சமூகத்தின் பக்கம் நிற்கிறது. சமத்துவம், சகிப்புத்தன்மை மற்றும் மரியாதையை முன்னிறுத்தும் எங்கள் நட்புகளுக்கு நாங்கள் துணை நிற்போம்” என்று தெரிவித்துள்ளது.