சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தாயார் மறைவக்கு ஜூனியர் என்.டி.ஆர், சூர்யா இரங்கல் ட்வீட்
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தாயார் இந்திராணி அவர்களின் மறைவுக்கு ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயாருமான இந்திராணி மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்றும் இன்று இரவு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தயார் மறைவையொட்டி, ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர் தன் டுவிட்டர் பக்கத்தில், இந்தியா தேவி அம்மா இறப்பு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா அண்ணாவுக்கும் , மகேஷ் அண்ணாவுக்கும் என் அனுதாபங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் நடிகர் சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில், எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகள்; அம்மா உங்களுக்கு எப்போதும் ஒளியாக இருந்து வழிகாட்டுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.