1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 6 அக்டோபர் 2022 (12:18 IST)

ராமரை இந்த அளவு தப்பா காட்ட முடியாது..! – ஆதிபுருஷ் மீது ராமர் கோவில் அர்ச்சகர் ஆவேசம்!

adipurush
பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் கடும் கண்டங்களை சந்தித்து வருகிறது.

பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இந்த படம் பேன் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் கடும் சர்ச்சைகளை சந்தித்துள்ளது.


தொழில்நுட்ப ரீதியாக இந்த படத்தின் அனிமேஷன் உள்ளிட்டவற்றை பலர் விமர்சித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க ராமாயண கதாப்பாத்திரங்களை தவறாக இந்த படம் சித்தரித்துள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. ராமனுக்கு மீசை இருப்பதும், ராவணன் கதாப்பாத்திரம் ஷார்ட் கட் செய்த முடியுடன் கேம் ஆப் த்ரோன்ஸ் கதாப்பாத்திரம் போல ட்ராகனில் வருவதும் பலருடைய கண்டனத்தை சந்தித்துள்ளது.

ராமாயண கதாப்பாத்திரங்களை தவறாக சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை தடை செய்ய வேண்டுமென அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குருவான சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். ட்விட்டரிலும் ஆதிபுருஷ் படத்தை தடை செய்யுமாறு தொடர்ந்து ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Edited By: Prasanth.K