1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. Aditya L1 goes to next stage says isro

வெற்றிகரமாக புவியின் 3வது சுற்று வட்ட பாதையில் ஆதித்யா எல்1 .. இஸ்ரோ அறிவிப்பு..!

ஆதித்யா எல்1
இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சமீபத்தில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1  என்ற விண்கலத்தை அனுப்பிய நிலையில் அந்த விண்கலம் ஏற்கனவே புவியின் இரண்டு சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக சென்ற நிலையில் தற்போது புவியின் மூன்றாவது சுற்றுவட்ட பாதைக்கு முன்னேறி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது 
 
தற்போது விண்காலத்திற்கு மூன்றாவது விசை அளிக்கப்பட்டுள்ளதாகவும்  296 கிமீ x 71767 கிலோமீட்டர் சுற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் ஆதித்யா எல்1  விண்கலத்தின் அடுத்த கட்ட பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் நடைபெறும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது. 
சந்திராயன் 3 போலவே ஆதித்யா எல்1   விண்கலமும் தனது இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva