புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (18:43 IST)

கரூர் ஸ்ரீ மஹா அபிஷேகக் குழுவின் சார்பில் 21 ம் ஆண்டு தெய்வத்திருமண விழா

கரூர் ஸ்ரீ மஹா அபிஷேகக் குழுவின் சார்பில் 21 ம் ஆண்டு தெய்வத்திருமண விழா வை முன்னிட்டு இன்று முகூர்த்தகால் நடும் விழா நடைபெற்றது.
ஆண்டு தோறும் ஆடி மாதம் கரூர் ஸ்ரீ மஹா அபிேஷகக் குழுவின் சார்பில் அருள் மிகு ஸ்ரீ கல்யாணபசுதீஸ்வரர் சுவாமிக்கு தெய்வத்திருமண விழா நடத்தி வருகின்றனர். 
 
அடுத்த மாதம் 4 ம் தேதி காலை அருள் மிகு கல்யாணபசுபதீஸ்வரருக்கும் அலங்காரவல்லி, சவந்திரநாயகிக்கும் தெய்வதிருமண விழா நடைபெறவுள்ளது. 
 
அதற்காக இன்று காலை ஆலய ராஜகோபுரம் எதிரே முகூர்த்தகால் நடப்பட்டத்தது. முன்னதாக பக்தர்கள் பட்டுபுடவை, திருமாங்கல்யம் பொருட்களை ஆலயத்திற்க ஊர்வலமாக எடுத்த வந்தனர். பின்னர் சுவாமி முன் வைத்து விநாயகர் பூஜை, மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு திருமண பொருட்களுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். 
 
தொடர்ந்து பக்தர்கள் படைசூழ முகூர்த்தக்கால் ஆலயத்திலிருந்து தோளில் வைத்து கொண்டு நமச்சிவாயா, நமச்சிவாய என்ற மந்திரங்கள் முழுங்க கொண்டு வரப்பட்டு, கம்பத்துக்கு பெண்கள், மற்றும் ஆண்கள் பாலாபிஷேகம் செய்தனர். ஆலய சிவாச்சாரியர்கள் முகூர்த்தகாலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனை காட்டப்பட்டு நடப்பட்டது, அடுத்த மாதம் 3, மற்றும் 4 ம் தேதிகளில் தெய்வத்திருமண விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருமண விழாவில் கலந்து கொண்டால் திருமணதடை, குழந்தை பேறு, பிரிந்து வாழும் தம்பதியினர் ஒன்று சேறுதல், மற்றும் பதினாறு செல்வங்களும் கிடைக்கும் என்று ஐதீகம். விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களுக்கு விழா கமிட்டியினர் சார்பில் சிறப்பான அன்னதானம் வழங்கப்படும்.