புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஆனந்தகுமார்
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (21:40 IST)

அமராவதி நதிநீர் விவகாரத்தில் கரூர் மாவட்டம் புறக்கணிப்பு - விவசாயிகள் முடிவு

அமராவதி அணையில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டும் மூன்று நாட்களுக்கு தண்ணீர் அழிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளது கடைமடை பகுதியான கரூர் மாவட்டத்திற்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது என்று கூறி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அமராவதி அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து கடைமடைக்கு தான் முன்னுரிமை என்ற நிலை இருந்தது ஆனால் தற்போது இந்த முறை மாற்றப்பட்டு அமராவதி கடைமடை முற்றிலும் புறக்கணிக்கப் படுகின்றன. 
 
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும். இதனால் கரூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கத்தினர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்பு போலீசார் பேச்சுவார்த்தை அடுத்து மாவட்ட வருவாய் அளவு சூரிய பிரகாசம் மனு அளித்தனர் கரூர் மாவட்டத்திற்கு உரிய முறையில் தண்ணீரை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.