கிராம நிர்வாக அலுவலர்கள் விஞ்ஞானிகளை போல் பணியாற்றி வருகிறார்கள் - சூர்யபிரகாஷ் புகழாரம்

karur
anandakumar| Last Updated: புதன், 24 ஜூலை 2019 (21:26 IST)
கிராம நிர்வாக அலுவலர்கள் விஞ்ஞானிகளை போல் பணியாற்றி வருகிறார்கள். கரூரில் நடைபெற்ற மாவட்ட வருவாய் அலுவலரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு நாளில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் புகழாரம்.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்காவிற்குட்பட்ட  பெரிய வடுகப்பட்டி பகுதியில் தமிழக அரசின் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவுநாள் விழா மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்வில் கரூர் கோட்டாட்சியர் சந்தியா உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் முதியோர் உதவிதொகை,விதவை உதவிதொகை,விலையில்லா வீட்டுமனைபட்டா,சொட்டுநீர் பாசனம்,பூச்சிகளை கவர்ந்து கொல்லும் சோலார் விளக்குகள்,தென்னங்கன்றுகள் வழங்குதல் என 90-பயனாளிகளுக்கு ரூபாய் சுமார்30-லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்த பின் சிறப்புரை நிகழ்த்திய வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் மடிக்கணிகள் வழங்கப்பட்டு உள்ளது.
 
தற்போது  துணை ஆட்சியருக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு உள்ளது. வருவாய் துறை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்லதால்  பொதுமக்கள் வழங்கும் மனுக்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்து  உடனடியாக தீர்வு செய்வதில் கிராம நிர்வாக அலுவலர்கள் இப்போது விஞ்ஞானிகளை போல் செயல்படுகிறார்கள் என தெரிவித்தார்.
 


இதில் மேலும் படிக்கவும் :