திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 29 மார்ச் 2023 (18:52 IST)

பழனி முருகன் கோவிலில் இன்று பங்குனி உத்திர கொடியேற்றம்: குவிந்த பக்தர்கள்..!

Palani temple
ஒவ்வொரு வருடமும் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பாக நடைபெறும் நிகழ்வு என்பதை அடுத்து இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்று உள்ளது. இதனை அடுத்து ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் குவிந்துள்ளனர். 
 
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம் பங்குனி உத்திரம் ஆகியவை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
 
பத்து நாட்கள் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும் என்றும் ஒவ்வொரு நாளும் சாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு நகரங்களில் இருந்து பங்குனி பழனி கோவிலுக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran