வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Updated : வியாழன், 30 மார்ச் 2023 (23:53 IST)

இன்று சீரடி சாய்பாபா ஜெயந்தி தினம்: உலகம் முழுவதும் பக்தர்கள் கொண்டாட்டம்..!

இன்று சீரடி சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் அவரது பிறந்தநாளை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கங்கா-தேவகி அம்மா ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் சாய்பாபா. இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறினாலும் அது குறித்த ஆதாரங்கள் தெளிவாக இல்லை. 
 
இந்த நிலையில் அவர் ஏராளமான அற்புதங்களை செய்துள்ளார் என்றும் அவரை எந்த வடிவத்தில் பக்தர்கள் பார்க்க விரும்பினாரோ அதே வடிவத்தில் அவர் மாறினார் என்றும் கூறப்படுகிறது. 
 
சீரடியில் அவருக்கு யில் கட்டி ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வழிபட்டு வருகின்றனர். சீரடி பாபாவை வழிபட்டால் அனைத்து துன்பங்களும் போய்விடும் என்றும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. 
 
மேலும் பாபாவை சீரடிக்கு சென்று தான் வழிபட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்றும் அவரது புகைப்படத்தை வைத்து ஆரத்திகள் எடுத்துக் கொண்டாடலாம் என்று கூறப்படுகிறது.
 
சாய்பாபா நாமத்தை எந்த அளவுக்கு நம்பிக்கையோடு உச்சரிக்கின்றோமோ அந்த அளவுக்கு பலன்களை கிடைக்கும் என்பது அவரது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
 
 
Edited by Mahendran