வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (20:48 IST)

பழனி முருகன் கோயிலில் நாளை பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்!

Palani temple
பழனி முருகன் கோயிலில் நாளை பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் உள்ள பழனி முருகன் கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படைவீடாக உள்ளது. இங்கு, ஒவ்வொடு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சூரர்களை வென்ற பின்னர், பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளான்று முருகன், தெய்வானையை திருமணம் செய்த தினத்தை, பங்குனி உத்திர திருவிழாவாக  கொண்டாடி வருகின்றனர்.

கோடையில் தொடங்கும் இவ்விழாவின்போது, பக்தர்கள் கொடுமுடி சென்று பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து பழனிக்கு வந்து அபிஷேகம் செய்வது  கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

னாளை காலையில் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்குகிறது. 10 நாட்கள் இத்திருவிழா நடைபெறவுள்ள நிலையில், வரும் 3 ஆம் தேதி முத்துக்குமாரசாமி, வள்ளி- தெய்வானை  திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. அன்றிரவில் வெள்ளி வீதி உலாவும்  4 ஆம் தேதி மாலை கிரி வீதியில் உத்திர தேரோட்டமும், 7 ஆம் தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாக கோவி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.