1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By
Last Modified: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (14:01 IST)

நெற்றியில் மூன்று பட்டை விபூதி இடுவதற்காக தத்துவங்கள்!!

நெற்றியில் மூன்று பட்டை போடுவதற்கு பயன்படும் விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும்.
 
சிவனை வழிபடும் பலரும் இறைவனை வணங்கிய பிறகு ஆலயத்தில் தரப்படும் சிவனை வழிபடும் பலரும், இறைவனை வணங்கிய பிறகு ஆலயத்தில்  தரப்படும் திருநீற்றை எடுத்து மூன்று விரல்களைக் கொண்ட பட்டையாக தீட்டிக்கொள்வார்கள்.
 
கோயில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும்  மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும். இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ரிக்வேதம், நடுவிரல் யஜூர் வேதம், மோதிர  விரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது.
 
மூன்று பட்டைகள் இடுவது வேதங்களை மட்டுமன்றி வேறு சிலவற்றையும் குறிப்பாதாக உள்ளது. 1. பிரம்மா, விஷ்ணு, சிவன் 2. சிவன், சக்தி, ஸ்கந்தர் 3. அறம்,  பொருள், இன்பம் 4. குரு, லிங்கம், சங்கமம்  5. படத்தல், காத்தல், அழித்தல் ஆகியவையாகும்.