புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (19:40 IST)

ரிலீசுக்கு முன்பே பட்டையை கிளப்பும் 2.0 - இப்பவே இதனை கோடி வசூலா!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.
 
ரஜினிகாந்த் நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் 2.0. இப்படம் ரூ.600 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 
 
சமீபத்தில் இதன் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவற்றைப் பார்க்கும் போது, செல்போன் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், வரும் 29ஆம் தேதி திரைக்கு வரவுள்ள 2.0 படம் வெளியாவதற்கு முன்பே ரூ.120 கோடியை வசூல் செய்துள்ளது. 
 
இது தியேட்டர்கள் உரிமைக்காக விற்பனை செய்யப்பட்ட தொகை ஆகும். ஒரு படம் வெளியாவதற்கு முன்பே, இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்வது இதுவே முதல் முறையாகும். 
 
இப்படத்திற்கான முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை. அப்படி இருந்தும் இப்பவே ரூ. 120 கோடி வசூல் என்றால், இன்னும் முன்பதிவுகள் தொடங்கினால், இதைவிட அதிக தொகை ரிலீஸுக்கு முன்பே செய்து பிரமாண்ட சாதனையை படைக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.