ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை? நெட்டிசன்கள் கேள்வி

Last Modified செவ்வாய், 30 அக்டோபர் 2018 (22:36 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீரங்கம் சென்றிருந்த திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு பூசாரி வைத்த விபூதியை அழித்தார். இதற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று தேவர் திருமகன் பொன்.முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு சென்ற அதே ஸ்டாலின், தேவருக்கு பூஜை செய்த விபூதியை பூசாரி வைத்தபோது அழிக்கவில்லை. அவர் மீண்டும் காரில் ஏறும் வரை அவரது நெற்றியில் அந்த விபூதி இருந்ததாக கூறப்படுகிறது.

தேவர் சமுதாயத்தின் ஓட்டுக்களை பெற மட்டுமே அரசியல்வாதிகள் பசும்பொன் தேவரின் குருபூஜையில் கலந்து கொள்வதாக கூறப்படும் நிலையில் ஸ்டாலினின் இந்த இரட்டை நிலையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆத்திகம் அல்லது நாத்திகம் இரண்டில் ஒரு கொள்கையை ஸ்டாலின் கடைபிடிப்பது நல்லது என்றும், அரசியலுக்காக ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் மாறி மாறி பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :