1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (12:09 IST)

செளமியநாராயண பெருமாள் ஆலயத்தில் மாசி மக தெப்ப உற்சவம்..! கொடியேற்றத்துடன் தொடக்கம்.!!

temple
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு செளமியநாராயண பெருமாள் காேயிலில் மாசி மக தெப்ப உற்சவம்  கொடியேற்றத்துடன்  கோலகலமாக துவங்கியது.
 
108 திவ்யதேசங்களில் ஒன்றான உலகப்புகழ் பெற்ற இக்கோயிலில்  மாசி மக தெப்ப உத்ஸவம் 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த தெப்ப உற்வத்திற்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு கோயில் தெப்பக்குளப் படிகளிலும், குளத்தைச் சுற்றிலும் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். 
 
இவ்விழாவை முன்னிட்டு உற்சவர் பெருமாள் மற்றும் தேவியர்கள் கல்யாண மண்டபம் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தில் உள்ள கொடிமரத்தில் கருடபெருமான், சித்திரம் வரையப்பட்ட கொடியானது மேள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

flag hosting
பின்பு கொடி மரம் தர்ப்பைபுல் மற்றும் மாஇலையால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு புனித நீர் மற்றும், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு ஒருமுக தீபம், ஏழு முக தீபம், கும்ப தீபம் உள்ளிட்ட பல்வேறு தீபாரதனைகள் சுவாமிக்கும் கொடிமரத்திற்கும் காட்டப்பட்டது. 
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி, தாயரை வழிபட்டனா். விழாவின் முக்கிய நிகழ்வான வருகின்ற 24ம் தேதி மின்ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியாருடன் எழுந்தருளி பகல்  மற்றும் இரவில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது