நாகம்மாள் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்..! நாகம் போல சாமியாடிய பெண் பக்தர்கள்..!!
உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 16வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில், இந்த கோவிலை புரணமைப்பு செய்து 12 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் மூன்று கால யாக பூஜைகள் செய்து நாகம்மாள் சாமிக்கு உருவேற்றி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து நாகம்மாள் சிலைக்கும் புனித நீர் ஊற்றி, பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்தனர்.
கும்பாபிஷேக நிகழ்வின் போது 10க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அருள் இறங்கி நாகம் போல சாமியாடிய சம்பவம் நெகழ்ச்சி மற்றும் பரவசத்தை ஏற்படுத்தியது.
இந்த கும்பாபிஷேக விழாவில் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.